திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மக்களுக்கு சந்தர்ப்பம்...!
மொரட்டுவை, பாணந்துறை மற்றும் ஹோமாகம ஆகிய காவற்துறை அதிகாரப் பிரதேசங்களில் நேற்று இரவு முதல் மீள் அறிவிப்பு வெளியாகும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாய்ப்பளிக்கப்படும்.
இந்த தினங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்பட்டிருக்கும்.
கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தங்களை திறப்பதற்கு அனுப்பதிக்கப்படும்.
இராணுவத் தளபதி லெஃப்ட்டின் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.