மேல் மாகாணத்தில் 11 பொலிஸாருக்கு தொற்றியது கொரோனா -400 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

மேல் மாகாணத்தில் 11 பொலிஸாருக்கு தொற்றியது கொரோனா -400 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 57 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று 355 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.