இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
ஊவா, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பலத்த காற்று மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள் காணப்படுமாயின் அனர்த்தங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.