ஊரடங்கு பிரதேசத்தில் வியாபாரநிலையங்களை திறப்பதற்கான நாட்கள் அறிவிப்பு
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து ஊரடங்குச்சட்டம் சில பிரதேசங்களில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
மக்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
எனினும் தொடர் ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதியாக ஊரடங்கு அமுல்படுத்தப்படும் இடங்களில் கடைகளை திறப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒவ்வொரு பிரதேசத்திலும் கடைகள் திறப்பதற்கான நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அவை வருமாறு
கம்பஹா மாவட்டம்
ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன்
கொழும்பு மாவட்டம்
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி
களுத்துறை மாவட்டம்
ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன்
குருநாகல் மாவட்டம்
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி