அதிவேக நெடுஞ்சாலை ஊடாக முன்னெடுக்கப்படும் நெடுந்தூர பேருந்து சேவைகள்
மாகும்புரவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோமாகமை பேருந்து நிலையம் உட்பட அதனை அண்மித்த பகுதிகளில் இன்று (27) காவற்துறையின் உதவியுடன் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது, கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் சேவையாட்களின் ஆதரவு வேண்டும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.