தனியார் துறையினரின் சம்பள விவகாரம்! ஜனாதிபதி தலைமையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தனியார் துறையினரின் சம்பள விவகாரம்! ஜனாதிபதி தலைமையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தற்போதைய சூழ்நிலையில், தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, Zoom தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது பேசிய அமைச்சர்,

தற்போது கொவிட் – 19 தொற்றின் காரணமாக ஏற்ப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனை தொடர்ந்து தனியார்துறை ஊழியர்கள் சம்பளம் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக ஏற்கனவே இதற்காக அமைக்கப்பட்ட செயலணியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவர்களுக்கான சம்பள நடைமுறையை இவ்வருடம் செப்டம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையை அரசாங்கம் தனியார் துறையினருக்கு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.