கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டம் ஆரம்பம்!

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டம் ஆரம்பம்!

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இந்த நிகழ்வு வட மத்திய மாகாணசபை மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதற்காக நியமிக்கப்பட்டுள்ள உரிய அதிகாரிகள், அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் ஆகியோர் நாளை அநுராதபுரத்தில் மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில்,  அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த செயறதிட்டம் மேற்கொள்ளப்படுகின்றது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதமர் அலுவலகத்தினால் இந்த வேலைத்திட்டம் ஒருங்கிணைக்கப்படுவதுடன், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது