இதுவரை சமூகப் பரவல் இல்லை - அடித்துக் கூறும் வைத்தியர் சுதத் சமரவீர
இலங்கையில் இன்னமும் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லையென வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டினுள் சிறந்த சுகாதார அமைப்பு காணப்படுவதனால் கொரோனா நிலைமைக்கு முகம்கொடுக்க மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய இயலுமை உள்ளதாகவும் தொற்றாளர்கள் எவ்விதத்திலும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவில்லை எனவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கெரோனா தொற்றுக் குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி மிகப்பெரியது. இதனால் நாடு பூராகவும் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொரோனா தொற்று சமூகப் பரவல் ஏற்பட்டிருக்குமானால் தொற்றாளர்களுக்கு இடையில் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை.
அவ்வாறான நிலை எமது நாட்டினுள் இதுவரை பதிவாகவில்லை. அனைத்து தொற்றாளர்களும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புபட்டுள்ளனர் என்றார்.