கொரோனா ஆபத்தான இடங்களாக கொழும்பின் சில பகுதிகள் அடையாளம் - ஐ.டி.எச் தகவல்

கொரோனா ஆபத்தான இடங்களாக கொழும்பின் சில பகுதிகள் அடையாளம் - ஐ.டி.எச் தகவல்

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியும் நுகேகொடையும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு, அதிகம் ஆபத்தான பகுதிகளின் விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவு இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் 27 பொதுசுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் ஆபத்தானவையாக காணப்படுகின்றன.

இதில் கொழும்பில் ஏழு சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளும், கம்பஹாவில் 19 சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் மற்றும் களுத்துறையில் இரண்டு சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் ஆபத்தானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கொழும்புமாநாகர சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளும், நுகேகொடை, மொரட்டுவ, பத்தரமுல்ல, கொலனாவ உட்பட பலபகுதிகள் மிகவும் ஆபத்தானவையாக காணப்படுகின்றன என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.