கடந்த 24 மணித்தியாலத்தில் 46 பேர் கைது...!
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 46 பேர் கைது செய்யிப்பட்டுள்ளனர் என்பதோடு 7 வாகனங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் 1122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 162 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.