6 விடயங்களை உள்ளடக்கிய மூலோபாயம் ஜனாதிபதியிடம்..!

6 விடயங்களை உள்ளடக்கிய மூலோபாயம் ஜனாதிபதியிடம்..!

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான 6 விடயங்களை உள்ளடக்கிய மூலோபாயம் ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.

ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த மூலோபயத்தை கையளித்ததாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம்  தெரிவித்தார்.