மினுவாங்கொடை கொத்தணியில் இருந்து நாடு முழுவதும் கொரோனா பரவ இதுவே காரணம்..!
பொதுமக்கள் வெளிபிரயாணங்களையும், ஒன்றுகூடல்களையும் மட்டுப்படுத்தாமையே, மினுவாங்கொடை கொத்தணியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமாய் அமைந்தது என கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் வைத்திய நிபுணர் ஷெரின் இமானுவெல் பாலசிங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சமய நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகள் முதலான பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு மக்கள் சென்றமையும் இந்த தொற்று பரவலுக்கு காரணமாய் அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.