உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு..!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு..!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற இந்நிலையில் இந்த வாரத்தினுள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 டொலர்களை விடவும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், துசேரா பண்டிகையின் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை மூன்று மாதங்களாக அதிக உயர்வை கண்டது.

இந்தியாவில் கடந்த தினங்களில் தங்க இறக்குமதிக்கு 12.5 வீத இறக்குமதி வரி மற்றும் 3வீத மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதன் காரணமாக தங்கத்தின் விலை இந்த வருடத்தில் 30வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.