களுத்துறை நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வியாபார நிலையங்களுக்கு நேர்ந்த கதி (காணொளி)

களுத்துறை நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வியாபார நிலையங்களுக்கு நேர்ந்த கதி (காணொளி)

களுத்துறை நகரில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விற்பனை நிலையங்களை இடித்து அகற்றுவதற்கு களுத்துறை நகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்கள் நேற்றிரவு காவல்துறையினரின் பாதுகாப்புடன் களுத்துறை பிரதேச சபையினரால் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில் தங்களது கடைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல இலட்சம் ரூபாய் செலவில் விற்பனைக் கட்டிடத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு குறித்த வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தும், அவர்கள் அதை விட்டு வெளியேறாமல் இருப்பதாக களுத்துறை நகரசபை தலைவர் அமீர் நசீர் தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கையானது நகர பாதுகாப்பையும் அழகையும் சீர்குலைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தங்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய விற்பனைக் கட்டிடத் தொகுதியில் ஏராளமான குறைப்பாடுகள் காணப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.