அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ இலங்கை வருகின்றார்..!

அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ இலங்கை வருகின்றார்..!

நாளைய தினம் இலங்கை வருகின்ற அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் நாளை மற்றும் நாளை மறுதினமும் பொம்பியோ தமது இலங்கை விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தற்போதைய நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான காரணம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென ஜே.வி.பி கோரியுள்ளது

ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு 5 நாட்கள் முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இலங்கையிலுள்ள அரச தலைவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு தற்போது நவீன தொழிநுட்பங்கள் சிறப்பாக முன்னேற்றமடைந்துள்ளன.

இலங்கை மாத்திரமின்றி சர்வதேச ரீதியாக கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.