புத்தளம் - கற்பிட்டியில் 7 பேருக்கு கொரோனா

புத்தளம் - கற்பிட்டியில் 7 பேருக்கு கொரோனா

புத்தளம் - கற்பிட்டி பிரதேசத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு பேலியகொட மீன் சந்தைக்குச் சென்றுவந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த மீன் விற்பனையாளர்கள் , மீன்லொறி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 40 பேர் கடந்த சனிக்கிழமை(24) பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் சுகாதார பரிசோதகர்களின் விஷேட மேற்பார்வையில் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்திய 40 நபர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டள்ளது.

மண்டலகுடா மற்றும் குறிஞ்சிப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா இருவரும், வாழைத்தோட்டம் (வன்னிமுந்தல்) ,மாம்புரி மற்றும் வெந்தேசிவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.