சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோர் 316 நபர்கள் வீடுகளுக்கு..!!
முப்படைகளின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்ற சுய தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து மேலும் 316 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று (26) அவர்களது வீடுகளை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளை நோக்கி சென்றோரின் எண்ணிக்கை 54,427 ஆகும்.
மேலும் 8421 நபர்கள் 73 சுயதனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.