மட்டக்களப்பில் 16 பேருக்கு கொரோனா..!

மட்டக்களப்பில் 16 பேருக்கு கொரோனா..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

கோரளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அத்துடன் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு தற்போது பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக மட்டகளப்பில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.