நேற்று உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று..!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்த 70 வயதான நபருக்கு கொவிட்19 தொற்றிருந்தமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 காரணமாக 16 வது மரணம் நேற்று பதிவானது.
கொழும்பு 2 பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவரது இரத்தத்தில் கிருமி தொற்று காணப்பட்டமையினால் உடலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர் கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் உயிரிழந்தமைக்கு குறித்த சிக்கல்களே காரணம் என அறவிக்கப்பட்டுள்ளது