தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
காலிக்கான அஞ்சல் தொடருந்து தவிர்ந்த, இன்றிரிவு இடம்பெறவிருந்த ஏனைய அனைத்து அஞ்சல் தொடருந்துகளின் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடருந்து கட்டுப்பாட்டு மையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
எவ்வாறிருப்பினும், ஏனைய அனைத்து தொடருந்து சேவைகளும் தற்போதுவரை வழமைபோல இடம்பெறுவதாகவும் தொடருந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றம் மற்றும் அஞ்சல் தலைமையகம் என்பன பொதுமக்கள் சேவைக்காக திறக்கப்பட மாட்டாது அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.