மூன்று பகுதிகளுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படாது- இராணுவத் தளபதி
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பேருவளை, பயாகலை முதலான காவல்துறை அதிகார பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் நீக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் நீக்கப்படும் என இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அவ்வாறே நீடிக்கும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.