சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 118 ஆவது இடத்தில்
கொவிட்-19 பரவல் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 118 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது.
கடற்படை மற்றும் கந்தக்காடு கொத்தணிகளின் பரவலை அடுத்து, இலங்கையில் கொரோனா பரவல் நிலையானது வீழ்ச்சிப் போக்கில் காணப்பட்டது.
எனினும், அண்மையில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் பரவல் நிலை தீவிரமடைந்துள்ளமையினால், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தகவல்களின்படி, நேற்றிறரவு வரையில் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 521 ஆக பதிவாகியிருந்தது.
இந்த எண்ணிக்கையில், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் மாத்திரம் 4 ஆயிரத்து 50 பேர் அடங்குகின்றனர்.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் இவ்வாறு ஏற்பட்ட அதிகாரிப்பானது, கொவிட்-19 பரவல் நிலை தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில், இலங்கையின் பதிவுநிலையை பின்னிலையில் இருந்து முன்னோக்கி நகர்த்தியுள்ளது.
215 நாடுகள் பதிவாகியுள்ள சர்வதேச நாடுகளின் பட்டியலில், நேற்று முன்தினம் 119 ஆவது இடத்தில் பதிவாகியிருந்த இலங்கை, நேற்றைய தினம் 118 ஆம் இடத்தில் பதிவாகியது.
117 ஆவது இடத்தில் இருக்கும் மௌரிடானியாவில் ஆயரசவையnயை 7 ஆயிரத்து 663 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
கொவிட் பரவல் நிலை தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் 114 முதல் 120 வரையில் பதிவாகியுள்ள நாடுகளில், கடந்த சில தினங்களில் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் போக்கை, சர்வதேச தகவல்களின் மூலம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.