கொரோனா தொடர்பில் உண்மையயை ஏற்றுக் கொள்ளுங்கள்: சுகாதார அமைச்சின் பேச்சாளர்
இந்த நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டால் அது ஆபத்தான சூழ் நிலையை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொரோனா கொத்து எவ்வாறு தோன் றியது என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லாததால் கொரோனா தொற்று நாட்டில் சமூக மயமாக்கப்பட வில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முன்னைய காலங்களை விட கடந்த சில நாட்களாக பெருமளவில் தொற்றாளர்கள் அடையாளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.