மாரடைப்பால் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து பெண் ஒருவர் பலி..!

மாரடைப்பால் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து பெண் ஒருவர் பலி..!

ஹபரன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் பெண் உத்தியோத்தர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர் சுற்றுலா விடுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவற்துறை கூறியுள்ளது.

இதன்போது நீச்சல் தடாகத்தை சுத்தம் செய்த குறித்த பெண் மாரடைப்பு காரணமாக நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.