50 இலட்சம் பெறுமதியான டின் மீன்களுக்கு முத்திரை வைப்பு..!!

50 இலட்சம் பெறுமதியான டின் மீன்களுக்கு முத்திரை வைப்பு..!!

முந்தலம பிரதேசத்திலுள்ள உற்பத்தி நிலையமொன்றில போழி தரச் சான்றிதழ்களை பயன்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கப்பட இருந்த ரூபாய் 50 இலட்சம் பெறுமதியான டின் மீன்களுக்கு முத்திரை குத்தப்பட்டுள்ளது.

புத்தளம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எஸ்.எல்.எஸ் தரச் சான்றுகளை துஷ்பிரயோகம் செய்து டின் மீன்களின் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து வழங்கப்பட்ட முறையீடு காரணமாக நடத்தப்பட்ட விசேட தேடலின் போதே முத்திரை வைக்கப்பட்டது.

எனினும் அந்த டின் மீன்கள் பாவனைக்கு உகந்ததாக இருப்பதாகவும், தரச் சான்றிதழ்களை துஷ்பிரயோகம் செய்ததன் குற்றச் சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படவுள்ளது. குறிப்பிட்ட டின் மீன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.