காவற்துறையினர் அதிரடி நடவடிக்கை..! 05 பேர் கைது

காவற்துறையினர் அதிரடி நடவடிக்கை..! 05 பேர் கைது

அம்பாறை-திருக்கோவில் பகுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 07 துப்பாக்கிகளுடன் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பகுதியை சேர்ந்த 26, 29, 44 மற்றும் 48 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.