உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டம்

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுகை அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தினைக் குறைத்து வடிந்தோடும் மழை நீரினை முறையாக சேகரித்து விவசாயம் மற்றும் குடிநீர் பாவனைக்காகப் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்;கமைய அம்பாறை மாவட்டத்திற்காக மகோயா நீர்தேக்கமும், மட்டக்களப்பு மாவட்டத்திற்காக உறுகாமம் மற்றும் கித்துள் நீர்த் தேக்கங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.