ஆறாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி

ஆறாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கி வருகின்றார்.

முன்னாள் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மலிக் சமரவிக்ரம மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியர் நாயகம் துஸித் முதலிகே உள்ளிட்ட ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினர்களுக்கு அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் இன்று வழங்கியிருந்தார்.

ஆறாவது நாளாகவும் சாட்சியமளிப்பதற்காக இன்று முற்பகல் 10 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், பிற்பகல் 1.15 அளவில் அங்கிருந்து வெளியேறியதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் 29 ஆம் திகதி ஆணைக்குழுவில் மீள முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.