கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்களை தொடர்ந்தும் பணியில் அமர்த்த முடியாது! நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்
கொரோனா தொற்றுக்கான குணங்குறிகள் தென்பட்ட பின்னர் பணியாளர் ஒருவரை பணிகளில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுக்கமுடியாது என்று சுற்றாடல் மற்றும் நிபுணரும் சமூக வைத்திய ஆலோசகருமான வைத்திய கலாநிதி இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.
பணியாளர் ஒருவருக்கு இருமல், தடிமன் உட்பட்ட குணங்குறிகள் இருக்குமாயின் அவர் ஒரு வாரத்துக்கு வீட்டில் தங்கியிருந்து மருத்துவம் செய்யப்படவேண்டும்.
இந்தநிலையில் அவர் பணியாற்றும் நிறுவனமும் அவரை கண்காணித்து பொது மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்கவேண்டும்.
இதற்கான நிறுவனங்கள் யாவும் தமது நிறுவனத்தின் கொரோனா மையம்; ஒன்றை அமைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக சுற்றாடல் மற்றும் நிபுணரும் சமூக வைத்திய ஆலோசகருமான வைத்திய கலாநிதி இனோகா சுரவீர கேட்டுள்ளார்.