அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்
அரச நிறுவனங்களில் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களின் ஆக்கத்திறன்களை மேம்படுத்துவதற்காகவும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரச நிறுவனங்களில் கலாசார விடயங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடரினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த போட்டிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடத்தப்படவுள்ளன.
இதன்படி, சிறுகதை, சிறுவராக்கம், பாடலாக்கம், கவிதையாக்கம், சித்திரம் மற்றும் குறுநாடகம் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
குறித்த போட்டிகளுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் அனைவரும் போட்டிகளுக்கான நிபந்தனைகளை பின்பற்றி, உருவாக்கப்பட்ட ஆக்கம் மற்றும் போட்டிக்கான விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி, நிறுவனத் தலைவரின் விதப்புரையுடன், “அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் – 2020” எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்ப படிவத்தை செயலாளர், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய 1ஆம் கட்டடம், பத்தரமுல்லை என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் எதிர்வரும் 31 திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களைப் பெற 011 2861325 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அழைப்பை ஏற்படுத்தி மேம்பாட்டுப் பிரிவிலுள்ள எஸ்.பிரசாந்தி அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், www.cultural.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாகவும் தகவலைப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.