மாகாண சபைத் தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் எதிர் வரும் வாரங்களில் ஆரம்பம்..!!
கால தாமதமாக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துவது தொடர்பில் எதிர் வரும் வாரங்களில் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக மாகாண சபைக்கான மாநில அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண சபைகளினதும் அதிகார பூர்வ காலம் முடிவடைந்து ஒரு வருடம் கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட திருத்தம் காரணமாக கடந்த அரசாங்கத்தால் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்னெடுக்கவில்லை. அது தொடர்பாக அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ ஆணைக்குழுவொன்றை அமைத்து அறிக்கைகளை தொகுத்தும் அதில் பலன் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இறுதியாக அதிகார பூர்வ காலம் நிறைவடைந்திருப்பது ஊவா மாகாண சபையினதாகும். அது 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதியலாகும்
இதுவரையில் அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.