பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்திற்கு பயனாளிகள் தேர்ந்தெடுப்பு..!!
குடும்பங்களுக்கான பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதை துரிதப் படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது..
இது தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளர் பஸில் ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இந்த கலந்துறையாடல் இடம் பெற்றுள்ளது.
இதன்போது வீட்டுப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றினூடாக உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்கு இந்த தேசிய வேலைத்திட்டம் உதவுவதாக ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளர் பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அரச அலுவலகங்களுடன் இணைந்து நாட்டிலுள்ள 25 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த தேசிய வேலைத்திட்டம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.