ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!
எரிபொருள் கொண்டு சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் சந்திவெளி பகுதியில் வைத்து குறித்த நபரை மோதித்தள்ளியுள்ளது. இச்சம்ப இடத்திலேயே அவர் பலியாகியுள்ளார்.
சந்திவெளி வைத்தியசாலை வீதி கடற்கரை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (53வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றனர்.