தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான விசேட செய்தி

தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான விசேட செய்தி

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1903 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள்.

ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும்.

இதேவேளை கொரோனா தாக்கம் காரணமாக அண்மைக்காலங்களில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

மேலும் தங்கத்தின் நுகர்வும் 30% குறைவடைந்திருந்தது. இதுவும் விலை அதிகரிப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அண்மைய புள்ளி விபரங்களின் படி வரலாற்றில் என்றுமில்லாவாறு 2000 டொலர் வரை தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை தறபோது குறையத்தொடங்கியுள்ளது.

இலங்கையில் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என்று தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையம் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.