நாடாளுமன்றில் தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த சிங்கள பெண் எம்.பி

நாடாளுமன்றில் தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த சிங்கள பெண் எம்.பி

கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பிலான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் பெரும்பாலும் சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் மாத்திரமே உள்ளது.

தமிழ் மொழிரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொவிட் வைரஸுடனேயே நாம் அனைவரும் வாழவேண்டிய சூழல் உள்ளது. இது எமது நாட்டில் மாத்திரம் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் அல்ல. பூகோள ரீதியான தொற்றுநோயாகும்.

சரியான தகவல்கள் இந்த வைரஸ் தொடர்பில் வைத்திய நிபுணர்களிடமும் இல்லை. வரலாற்றில் எந்தவொரு சுகாதார அமைச்சருக்கும் இல்லாத சவால் தற்போதைய சுகாதார அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது.

கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களுக்கும் செவிகொடுக்க வேண்டும். தனிமைப்படுத்தல் நிலையங்கள் காணப்படும் மோசமான நிலைமை காரணமாக அதற்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர்.

கொவிட் வைரஸ் தொற்றுக்கொள்ளானவர்கள் மற்றும் இரண்டாம் நபர்கள் தொடர்பில் சமூகத்தில் பீதியொன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இவர்களை குற்றவாளிகள் போன்று பார்க்கின்றனர் என்றார்