தீவிரவாதிகளின் கோரத்தாண்டவம் - பன்னிரு சிறுவர்கள் உடல் சிதறிப் பலி!

தீவிரவாதிகளின் கோரத்தாண்டவம் - பன்னிரு சிறுவர்கள் உடல் சிதறிப் பலி!

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற விமானக் குண்டுதாக்குதலில் பன்னிரு சிறுவர்கள் உடல் சிதறிப் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் தகார் மாநில கிராமமொன்றில் அமைந்திருந்த மதபாடசாலையொன்றின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல்கள் அனைத்தும் சிறுவர்களின் உடல்கள் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிசெய்துள்ள நிலையில்,

ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இதனை நிராகரித்துள்ளதுடன் தலிபான் தீவிரவாதிகளே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.