அதி சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவருக்கு கொவிட் 19..!

அதி சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவருக்கு கொவிட் 19..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மதுகம - கொழும்பு அதி சொகுசு பேருந்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவருடன் தொடர்புடைய 34 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுகம பகுதியிலேயே அவர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓவிட்டிகல, பதுகம மற்றும் நவஜனபதய பகுதிகளை சேர்;ந்தவர்கள் என அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இரத்தினபுரி - முவகம பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பினை பேணிய 35 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் விற்பனை சந்தைக்கு மீனை கொள்வனவு செய்வதற்காக சென்ற ஒருவருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.