அட்டன் நகர மீன் வியாபாரிகளுக்கு பீ சீ ஆர் பரிசோதனை..!

அட்டன் நகர மீன் வியாபாரிகளுக்கு பீ சீ ஆர் பரிசோதனை..!

பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்துள்ளவர்களுக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த சந்தையில் இருந்து மீன் கொள்வனவு செய்து அட்டன் டிக்கோயா நகர பகுதியில் வியாபாரம் செய்வதாக பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்ட வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த மீன் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு பி.சி ஆர் பரிசோதணை மேற்கொண்ட பின்னர் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்பட்டதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் எஸ். பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.