
மாத்தறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு
புனர் நிர்மாணப் பணிகள் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (25) காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை கொட்டகொடை, பாதேகம, ரத்மலே, திக்வெல, வலஸ்கம மற்றும் குடாவெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.