பேலியகொட வந்து சென்ற இரத்தினபுரி மீன் வியாபாரிக்கு கொரோனா

பேலியகொட வந்து சென்ற இரத்தினபுரி மீன் வியாபாரிக்கு கொரோனா

இரத்தினபுரி பொதுச் சந்தையில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வியாபாரி பெலியகொட மீன் சந்தைக்கு வந்து சென்றுள்ளார்.

இதையடுத்து அவர் பி.சி.ஆர் பரிசோதனை செய்துள்ளார்.

அதில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரத்தினபுரியில் உள்ள முவகம பகுதியில் சுமார் 100 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.