44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

நாட்டின் 44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி செயற்படுதல் அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தங்களின் அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.

எனினும், அலுவலக வேலை நேரம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் அவற்றை பயன்படுத்த முடியாது எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள 33 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு வடக்கு பிராந்தியத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டிய மற்றும் குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.