இதுவரை 4,15,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இதுவரை 4,15,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை 4,15,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று (22) மாத்திரம் 8071 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக COVID-19 தொற்று ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணி தெரிவித்தது.

நாட்டில் இதுவரை 6,287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 2,712 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 3,561 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

14 ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.