காலி மீன் பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது...!

காலி மீன் பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது...!

காலி  மீன் பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பேலியாகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த மீன்பிடி துறைமுகம் முன்கூட்டிய அவதானத்துடன் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் காலி மீனவ துறைமுகத்தின் மீனவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் 166 பேருக்கு பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அகுங்கல்ல - கட்டுவெல கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்றைய தினம் பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.