கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு தொடர்பில் வெளியான தகவல்

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் 14ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவான நிலையில், உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெறவுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு கடந்த 17 ஆம் திகதி ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இங்கு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதிச் சடங்கு நடைபெறும் இடம் குறித்துத் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.