பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வீதிகளில் வீசுவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகக்கவசங்களை பொறுப்பற்ற விதத்திலும், பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எனவே பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை ஒரு குப்பைத் தொட்டியில் அல்லது பொருத்தமான இடத்தில் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும் போது, பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.