கொரோனா பரவலை சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியாது – GMOA
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியாதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளொன்றுக்கு பத்தாயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பதுடன் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.