விசேட பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்ட 863 பேர் - இராணுவத் தளபதி

விசேட பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்ட 863 பேர் - இராணுவத் தளபதி

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மேலும் 863 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி தியத்தலாவ தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 180 பேரும், குண்டசாலை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 150 பேரும், பட்டிக்கலோ கம்பஸ் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 192 பேரும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 146 பேரும், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 85பேரும், பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 110 பேரும் இன்றையதினம் விசேட பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினை கொண்டிருந்தவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதார பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.