வாகன வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

வாகன வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் வாகன வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்றுமுதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான வரிப்பத்திரங்கள் எதிர்வரும் நவம்பர் 15 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதிக்காக தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், www.motortraffic.wp.gov.lk எனும் இணையத்தளம் ஊடாக வாகன வருமான வரிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.