கொழும்பில் திடீரென அலைமோதும் மக்கள் கூட்டம் - தொடரும் அச்சநிலை

கொழும்பில் திடீரென அலைமோதும் மக்கள் கூட்டம் - தொடரும் அச்சநிலை

கொழும்பின் நகர் பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை கொழும்பின் பல பகுதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,

கொழும்பு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக மக்கள் மத்தியில் பரவியுள்ள வதந்திகள் காரணமாகவே மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பவற்றில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.