காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணிகள் ஆரம்பம்..!
முல்லைதீவு பகுதியில் கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போன இருவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பகுதியை சேர்ந்த குறித்த இருவரும் கடந்த 19 ஆம் திகதி கடற்றொழிலுக்காக சென்றதாக கூறப்பட்டுள்ளது.
கடற்றொழிலுக்காக சென்ற இவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என முல்லைதீவுகாவற்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுகின்றது.